செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

பிரேசிலில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா மரணம்

Published On 2020-09-09 20:47 GMT   |   Update On 2020-09-09 20:47 GMT
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 504 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1,27,464 ஆக அதிகரித்துள்ளது.
பிரேசிலியா:

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. லத்தின் அமெரிக்க நாடுகளில் அதிக கொரோனா நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகளை கொண்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிரேசிலில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. அங்கு தினசரி கொரோனா உயிரிழப்பு 200 முதல் 400 வரை இருந்து வந்த நிலையில் நேற்று அது 500-ஐ கடந்தது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 504 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 1,27,464 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 14,279 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதன் மூலம் மொத்த பாதிப்பு 41 லட்சத்து 62 ஆயிரத்து 73 ஆக உயர்ந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News