செய்திகள்
கோப்பு படம்.

எல்லையில் தற்போதைய பதற்றத்திற்கான பொறுப்பு முழுக்க முழுக்க இந்தியா தான்- சீனா பாதுகாப்பு அமைச்சகம்

Published On 2020-09-05 11:18 GMT   |   Update On 2020-09-05 11:18 GMT
லடாக் எல்லையில் தற்போதைய பதற்றத்தின் பொறுப்பு "முழுக்க முழுக்க இந்தியாவுக்குத்தான் உள்ளது" என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
பீஜிங்:

ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் இரவு கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் த்சோவின் தென் கரையில் சீனாவின் இராணுவம் ஊடுருவ முயற்சித்தது இதனை இந்திய இராணுவம் முறியடித்தது. இதனை தொடர்ந்து இந்த வாரம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து உள்ளது.

இந்தியா-சீனா எல்லையில் நிலைமையை தீர்க்க கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவும் சீனாவும் இராஜதந்திர மற்றும் இராணுவ அதிகாரிகள் மூலம் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. சீன தரப்பு இந்த புரிதலை மீறி ஆகஸ்ட் 29/30 நள்ளிரவில் பாங்காங் ஏரியின் தென் கரையோர நிலைமையை மாற்றும் முயற்சியில் ஆத்திரமூட்டும் இராணுவ சூழ்ச்சிகளில் ஈடுபட்டது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறி உள்ளது.

தற்போதைய பதற்றத்தின் பொறுப்பு "முழுக்க முழுக்க இந்தியாவுக்குத்தான் உள்ளது" என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

சீனாவின் மாநில கவுன்சிலரும் பாதுகாப்பு அமைச்சருமான வெய் ஃபெங்  கூறி இருப்பதாவது:-

"சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லையில் தற்போதைய பதற்றத்தின் காரணம் மற்றும் உண்மை மிகவும் தெளிவாக உள்ளது, இதன் பொறுப்பு முற்றிலும் இந்தியாவுக்குத்தான்" என்று கூறினார்.

எவ்வாறாயினும், இரு தரப்பினரும் "ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடியால் எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த கருத்தை ஆர்வத்துடன் செயல்படுத்த வேண்டும்" என்றும் "பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை" மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வலியுறுத்த வேண்டும்.

சீனா தன்னுடைய நிலப்பரப்பை இழக்க முடியாது, சீன இராணுவம் தேசிய இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க திறனையும் நம்பிக்கையையும் கொண்டுள்ளது.

நிலைமையை அதிகரிக்கும் எந்தவொரு செயலிலிருந்தும் விலகி, வேண்டுமென்றே மிகைப்படுத்தி, எதிர்மறையான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்.

இரு தரப்பினரும் "சீன-இந்திய உறவுகள் மற்றும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் ஒட்டுமொத்த நிலைமை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று சீனாவின் பாதுகாப்பு மந்திரி கூறினார்.
Tags:    

Similar News