செய்திகள்
கோப்புப்படம்

இந்தியா-ர‌ஷியா இணைந்து ஏ.கே.47 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்க முடிவு

Published On 2020-09-04 01:18 GMT   |   Update On 2020-09-04 01:18 GMT
ஏ.கே.47 203 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கான பேரத்தை இந்தியாவும், ர‌ஷியாவும் இறுதி செய்துள்ளன
மாஸ்கோ:

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், ர‌ஷியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதையொட்டி, ஏ.கே.47 ரக துப்பாக்கிகளின் சமீபத்திய, அதிநவீன வடிவமான ஏ.கே.47 203 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கான பேரத்தை இந்தியாவும், ர‌ஷியாவும் இறுதி செய்துள்ளன.

இந்திய ராணுவத்துக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் துப்பாக்கிகள் தேவைப்படுகின்றன. இவற்றில் ஒரு லட்சம் துப்பாக்கிகள் இறக்குமதி செய்யப்படும்.

மீதி துப்பாக்கிகளை, உத்தரபிரதேசத்தில் உள்ள கொர்வா ஆயுத உற்பத்தி தொழிற்சாலையில் இந்தியா-ர‌ஷியா கூட்டாக தயாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News