செய்திகள்
கொரோனா வைரஸ் தடுப்பூசி

தடுப்பூசிக்கு எதிரான கருத்துகள் - ரஷியா திட்டவட்ட மறுப்பு

Published On 2020-08-12 20:18 GMT   |   Update On 2020-08-12 20:18 GMT
ரஷியா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளை ரஷிய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மாஸ்கோ:

ரஷியா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பூசி அவசர அவசரமாக உருவாக்கப்பட்டுள்ளது, நம்பகத்தன்மையற்றது, பாதுகாப்பற்றது என்றெல்லாம் வெளிநாடுகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இவற்றை ரஷிய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ திட்டவட்டமாக மறுத்தார்.

இதுபற்றி அவர் மாஸ்கோவில் நேற்று கூறும்போது, “ரஷிய தடுப்பூசிக்கு எதிரான வெளிநாடுகளின் விமர்சனங்கள் அடிப்படை அற்றவை. வெளிநாட்டு சகாக்கள், போட்டியாக பார்க்கிறார்கள் என்றே நம்புகிறேன். எனவே தான் அவர்கள் எதிரான கருத்துகளை கூற முயற்சிக்கிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படை ஆதாரம் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். ரஷிய தடுப்பூசியின் பின்னால் நிச்சயமாக சில மருத்துவ அறிவு மற்றும் தரவுகள் உள்ளன” என அவர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News