செய்திகள்
துபாய் சிட்டி வாக் பகுதியில் இடம்பெற்றுள்ள முப்பரிமாண ஓவியத்தை படத்தில் காணலாம்.

துபாயில் முப்பரிமாண ஓவிய திருவிழா

Published On 2020-08-10 14:29 GMT   |   Update On 2020-08-10 14:29 GMT
துபாயில் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் பிராண்ட் துபாய் (அரசு ஊடகத்துறையில் உள்ள செயல் பிரிவு) சார்பில் முப்பரிமாண ஓவிய திருவிழா நடந்து வருகிறது.
துபாய்:

பிராண்ட் துபாய் மேலாளர் ஷாய்மா அல் சுவைதி கூறியதாவது:-

துபாயில் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் பிராண்ட் துபாய் (அரசு ஊடகத்துறையில் உள்ள செயல் பிரிவு) சார்பில் முப்பரிமாண ஓவிய திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி, துபாயில் உள்ள முக்கிய வீதிகளில், பொதுமக்கள் நடக்கும் இடங்களில் கண்கவரும் முப்பரிமாண ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த முப்பரிமாண ஓவியத்தில் வரையப்படும் உருவங்கள் தத்ரூபமாக உயிரோட்டத்துடன் அமைந்திருக்கும்.

இந்த திருவிழாவில் முப்பரிமாண ஓவியங்களை படைக்க சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஓவியக்கலைஞர்கள் துபாய் வந்துள்ளனர். இதில் சிட்டி வாக் பகுதியில் ஓவியங்களை வரைந்து முடித்துள்ளனர். குறிப்பாக 37 வயதுடைய சகாப் அல் ஹாஷெமி என்ற ஓவியக்கலைஞரின் படைப்பு அனைவரையும் கவர்ந்து வருகிறது. அவர் ராக்கெட் விண்வெளியில் பறந்து செல்வது போன்று தத்ரூபமாக வரைந்துள்ளார். தரையில் இருந்து வெளியே ராக்கெட் சீறி பாய்ந்து வருவதை போன்ற தோற்றம் பார்வையாளர்களை வெகுவாக கவரும் அம்சமாகும்.

மற்றொரு ஓவியத்தில் ஒரு பாட்டில் கடலின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை எச்சரிக்கை செய்வதை போன்ற ஓவியம் விழிப்புணர்வையும், உலகிற்கு முக்கிய தகவலையும் கூறுவதாக உள்ளது. இந்த பகுதியில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இசை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். துபாயில் முப்பரிமாண ஓவிய திருவிழா வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News