செய்திகள்
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர்

பெலாரஸ் பொதுத்தேர்தல்: 80 சதவீத வாக்குகள் பெற்று 6-வது முறையாக அதிபரானார் லூகாஷென்கோ

Published On 2020-08-10 10:27 GMT   |   Update On 2020-08-10 10:27 GMT
பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிபர் அலெக்சாண்டர் லூகாஷென்கோ தொடர்ந்து 6-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
பெலாராஸ் நாட்டில் நேற்று அதிபருக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. போராட்டங்கள், வன்முறைக்கு இடையே தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தல் முடிந்த உடன் வாக்குகள் எண்ணப்பட்டன. தற்போது அதிபராக இருக்கும் அலெக்சாண்டர் லூகாஷென்கோ 80.23 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால் அலெக்சாண்டர் லூகாஷென்கோ தொடர்ந்து 6-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்வியாட்லானா சிகானௌஸ்கயா 8.9 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றார்.

தேர்தல் முடிவுகள் மோசடி என்று நம்பும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களால் பதற்றமான சூழ்நி்லை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றிரவு பெலாரஸ் நகரங்களிலும், தெருக்களிலும் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர். 100-க்கு மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

தோல்வியை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சி தலைவர், ‘‘மெஜாரிட்டி எங்களுக்குத்தான். இதை நான் நம்புகிறேன். பேராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை அவமான செயல்’’ என்று தெரிவித்துள்ளார்.

சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த பின்னர் 26 வருடமாக அதிபராக இருக்கும் அலெக்சாண்டர் தேர்தல் முடிவு குறித்தும், போலீசாரின் அடக்குமுறை குறித்தும் இதுவரை பதில் அளிக்கவில்லை.
Tags:    

Similar News