செய்திகள்
சாம்பல் துகள்களை கக்கும் சினாபங் எரிமலை

இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை: 16,400 அடி உயரத்திற்கு பறந்த துகள்கள்

Published On 2020-08-10 08:27 GMT   |   Update On 2020-08-10 08:27 GMT
இந்தோனேசியாவில் குமுறிக் கொண்டிருந்த சினாபங் எரிமலை இன்று வெடித்ததில், 16,400 அடி உயரத்திற்கு சாம்பல் துகள்கள் பறந்தன.
இந்தோனேசியாவில் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 120 எரிமலைகள் உள்ளன. இதில் சினாபங் என்ற எரிமலை அவ்வப்போது வெடித்து அச்சுறுத்தி வருகிறது.

சுமார் 400 ஆண்டுகள் பழைமையானது இந்த மலை, கடந்த 2010-ல் வெடித்து சாம்பலை கக்கியது. அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அதன்பின் 2014-ல் (16 பேர்), 2016 (7 பேர்) எரிக்குழம்பை கக்கியுள்ளது.

சினாபங் கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. இதனால் எந்த நேரத்திலும் வெடித்து எரிகுழம்பை கக்கலாம் என்பதால், 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 30 ஆயிரம் மக்கள் முன்னெச்சரிகையாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இன்று திடீரென வெடித்து எரிகுழம்பை கக்கியது. எரிமலை வெடித்த வேகத்தில் சாம்பல் துகள்கள் 16,400 அடி உயரத்திற்கு பறந்தன. சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த சாம்பல் துகள்கள் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News