செய்திகள்
ஆர்ட்டிக் பனிப்பாறை

கனடாவின் ஆர்ட்டிக் கடற்பகுதியில் இடிந்து விழுந்த 80 சதுர கி.மீட்டர் வடிவிலான பனிப்பாறை

Published On 2020-08-07 14:22 GMT   |   Update On 2020-08-07 14:22 GMT
கனடா ஆர்ட்டிக் கடற்பகுதியில் 80 சதுர கிலோ மீட்டர் வடிவிலான கடைசி பனிப்பாறை அடுக்கு தானாகவே இடிந்து விழுந்துள்ளது.
ஆர்ட்டிக் கடற்பகுதி பனிப்பாறைகளால் நிறைந்து காணப்படகிறது. ஆனால் புவி வெப்பமயமாதல் காரணமாக கடலில் உள்ள ஐஸ் பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகி வருகின்றன. இதனால் கடல் நீர்மட்டம் உயர்ந்து பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கைப்பட்டது.

இருந்தாலும் புவிவெப்பமயமாதல் காரணமாக ஐஸ் பாறைகள் தொடர்ந்து உருகி வருகின்றன. கனடா நாட்டின் வடக்கு ஆர்ட்டிக் பகுதியில் இருந்த கடைசி ராட்சத பனிப்பாறை அடுக்கு தானாகவே அப்படியே இடிந்து விழுந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதில் 40 சதவீதம் பகுதி உருகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இடிந்து விழுந்த பனிப்பாறையின் அளவு 80 சதுர கிலோ மீட்டர் எனவும், நியூயார்க்கில் உள்ள 60 சதுர கிலோ மீட்டர் கொண்ட மன்ஹாட்டன் தீவைவிட பெரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ் பாறை இடிந்த பகுதி வடக்கு கனடாவுக்கு சொந்தமான மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள நுனாவட் எல்லீஸ்மீர் தீவில் உள்ளது. சாதாரண காற்று வெப்பநிலைக்கு மேல், கடல் காற்று மற்றும் பனி அடிக்கின் முன் திறந்த நீர் ஆகியவை பனிப்பாறையின் ஒரு பகுதியை உடைந்திருக்கலாம் என கனடாவின் பனி மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News