செய்திகள்
கலீபா சாட் செயற்கைக்கோள்

அபுதாபி, துபாய் நகரங்களை துல்லியமாக படம் பிடித்து அனுப்பிய கலீபா சாட் செயற்கைக்கோள்

Published On 2020-08-05 18:00 GMT   |   Update On 2020-08-05 18:00 GMT
அமீரகத்தின் கலீபா சாட் செயற்கைக்கோளானது அபுதாபி மற்றும் துபாய் நகரங்களின் புகைப்படங்களை உயர்தரத்தில் துல்லியமாக அனுப்பியுள்ளது.
துபாய்:

அமீரகத்தின் கலீபா சாட் செயற்கைக்கோளானது அபுதாபி மற்றும் துபாய் நகரங்களின் புகைப்படங்களை உயர்தரத்தில் துல்லியமாக அனுப்பியுள்ளது.

இது குறித்து முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தின் பொது இயக்குனர் யூசுப் அல் சைபானி கூறியதாவது:-

அமீரகத்தின் கலீபா சாட் செயற்கைக்கோள் கடந்த 2018-வது ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பானில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது டிஜிட்டல் மொசைக் முறையில் உயர்தரத்திலான புகைப்படங்களை அனுப்பியுள்ளது.

இதில் அபுதாபி மற்றும் துபாய் நகரங்கள் முழுவதும் இடம்பெற்றுள்ளன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்கட்டமைப்பு, நகர திட்டமிடல், சுற்றுச்சூழல் மற்றும் பருவமாறுபாடு கண்காணிப்பு, எரிசக்தி, கல்வி, தொழில்நுட்பம், சாலை மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

மேலும் நகரங்கள் வரைபடம் மற்றும் புவியியல் குறித்த ஆய்வுகளுக்கு இந்த புகைப்படங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதில் புவியியல் சார்ந்த பகுதிகளை வைக்கபடுத்தவும், நகர உள்கட்டமைப்பு குறித்த கணக்கெடுப்பிற்கும் பயன்படுத்தப்படும்.

தொடர்ந்து இந்த புகைப்படங்கள் மூலம் ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் வரைபடங்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News