செய்திகள்
இந்திய பெண் ஆராய்ச்சியாளர் சர்மிஸ்தா சென்

அமெரிக்காவில் இந்திய பெண் ஆராய்ச்சியாளர் கொலை

Published On 2020-08-05 17:51 GMT   |   Update On 2020-08-05 17:51 GMT
அமெரிக்காவில் இந்திய பெண் ஆராய்ச்சியாளர் சர்மிஸ்தா சென் கொலை செய்யப்பட்டார்.
வாஷிங்டன்:

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சர்மிஸ்தா சென் (வயது 43). திருமணத்துக்கு பிறகு, அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் பிளானோ நகரில் கணவருடன் குடியேறினார். மூலக்கூறு உயிரியல் படித்துள்ள அவர், புற்றுநோயாளிகளை வைத்து ஆராய்ச்சி நடத்தி வந்தார். 2 மகன்கள் உள்ளனர்.

சர்மிஸ்தா சென், தினந்தோறும் காலையில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதுபோல், பிளானோ நகரில் ஒரு பூங்கா அருகே ஓட்டப்பயிற்சிக்கு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. ஒரு கால்வாய் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

தற்செயலாக தாக்கப்பட்டு, சர்மிஸ்தா சென் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், பகாரி மான்கிரீப் (29) என்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டான். ஆனால், இந்த கொலை எப்படி நடந்தது என்று போலீசாருக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. பிரேத பரிசோதனை செய்த மருத்துவ குழுவும் எந்த தகவலும் வெளியிடவில்லை. சர்மிஸ்தா சென் கொல்லப்பட்டு கிடந்த இடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

Similar News