செய்திகள்
காரின் முகப்பில் அடைகாக்கும் சிறிய பறவை - மேதகு ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம்

'முல்லைக்கு தேர் கொடுத்த பாரி' போல பறவை கூடுக்கட்டி வாழ தனது காரை கொடுத்த துபாய் பட்டத்து இளவரசர்

Published On 2020-08-05 15:56 GMT   |   Update On 2020-08-05 15:56 GMT
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல பறவை கூடுக்கட்டி வாழ தனது காரை கொடுத்த துபாய் பட்டத்து இளவரசருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகிறது.
துபாய்:

துபாயின் பட்டத்து இளவரசராகவும், நிர்வாக கவுன்சில் தலைவருமாக விளங்கி வருபவர் மேதகு ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் ஆவார். இவருக்கு எப்போதும் உயிரினங்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருப்பவர். இதற்காகவே தனி மிருககாட்சிசாலை போன்ற இடத்தில் பல்வேறு விலங்குகளை மிக பாசமாக வளர்த்து வருகிறார்.

அடிக்கடி இவர் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விலங்கினங்களுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். கொரோனா பாதிப்பு காலங்களில் பட்டத்து இளவரசர் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தார். அதனால் அவரது வாகனங்கள் பல பயன்படுத்தாமல் இருந்து வந்தது.

இதில் சமீபத்தில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் கருப்பு நிற மெர்சிடஸ் வாகனத்தின் முகப்பு பகுதியில் சிறிய பறவை ஒன்று கூடுக்கட்டி முட்டையிட்டது.

பின்னர் அதில் அமர்ந்து அடைகாக்க தொடங்கியது. இதனை பார்த்த பட்டத்து இளவரசர் அந்த வாகனத்தை பயன்படுத்தாமல் விட்டு விட்டார்.

மேலும் கூட்டை கலைக்கும் விதமாக அந்த வாகனத்தை சுற்றி பணியாளர்கள் யாரும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கை செய்யும் சிவப்பு நிற டேப்பை நான்கு புறத்திலும் சுற்றி வைத்துள்ளார்.

அதில் அந்த பறவை தனது முட்டைகளை இன்னும் அடைகாத்து வருகிறது. முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல, ஒரு சிறு பறவைக்காக தனது காரையே அளித்த பட்டத்து இளவரசரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வரைலாகி வருகிறது.

பலரும் இது குறித்து பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும், அவரது இறக்க குணத்தையும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News