செய்திகள்
அக்னிட்டா ரைசிங்

அணுசக்தி துறையில் அமீரகம் முன் உதாரணமாக திகழ்கிறது - உலக அணுசக்தி அமைப்பின் பொது இயக்குனர் பாராட்டு

Published On 2020-08-04 07:15 GMT   |   Update On 2020-08-04 07:15 GMT
அணுசக்தி துறையில் அமீரகம் முன் உதாரணமாக திகழ்கிறது உலக அணுசக்தி அமைப்பின் பொது இயக்குனர் அக்னிட்டா ரைசிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அபுதாபி:

உலக அணுசக்தி அமைப்பின் பொது இயக்குனர் அக்னிட்டா ரைசிங் கூறியதாவது:-

அணுசக்தி துறையில் முதலீடு செய்வது குறித்து மற்ற நாடுகள் அமீரகத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக அமீரகத்தில் அணுசக்தி உற்பத்தியானது நிலைத்தன்மையுடைய கட்டமைப்பை கொண்டுள்ளது.

தூய எரிசக்தி தேவையில் அணுசக்தியானது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாததாக உள்ளது. அபுதாபி அல் பரக்கா அணுசக்தி நிலையத்தில் மின்சார உற்பத்தியானது குறைந்த கார்பனை வெளியிட்டு அதிக மின்சார தேவையை பூர்த்தி செய்வதாக உள்ளது.

எரிசக்தி தேவையில் அமீரகம் அரபு நாடுகளில் முதலவதாக அணுசக்தியை பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் அல் பரக்கா அணுமின் நிலையத்தில் உள்ள 4 அணு உலைகளும் செயல்பட தொடங்கும். இதன் மூலம் அமீரகத்தின் எரிசக்தி தேவையில் 25 சதவீதம் இந்த அணுமின் நிலையத்தில் இருந்து பெறப்பட உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு நெருக்கடி நிலையை சந்தித்தாலும் விடாமுயற்சியுடன் அமீரகம் இந்த அணுசக்தி திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது பாராட்டத்தக்கது. உலக அளவில் அணுசக்தி துறையில் அமீரகம் முன் உதாரணமாக திகழ்கிறது. உலக அளவில் 2050-வது ஆண்டுக்குள் பெறப்பட உள்ள 1000 ஜிகாவாட் இலக்கில் அமீரகத்தின் பங்கும் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News