செய்திகள்
ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு துப்பாக்கி வழங்கிய காட்சி

கொரியப்போர் நினைவு தினம் - ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு துப்பாக்கி வழங்கிய கிம் ஜாங் அன்

Published On 2020-07-28 12:27 GMT   |   Update On 2020-07-28 12:27 GMT
கொரியப்போர் நினைவு தினத்தையொட்டி வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு துப்பாக்கிகளை வழங்கினார்.
கொரியப்போரின் 67வது ஆண்டு நினைவு தினம் மிகவும் விமரிசையாக தலைநகரில் கொண்டாடப்பட்டது.  நினைவு தினத்தையொட்டி  வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ராணுவ தளபதிகளுடன் உரையாடினார்.  

கொரியப்போர் நினைவு தினத்தையொட்டி வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு துப்பாக்கிகளை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அதனை பெற்றுக்கொண்ட ராணுவ அதிகாரிகள் அனைவரும் கூடி நின்று கைகளை உயர்த்தி முழக்கமிட்டதை கண்ட கிம் ஜாங் அன் அதனை மகிழ்ச்சியுடன் ரசித்தார்.

நீண்ட நாட்களுக்குப் பின் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்  அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகளுடன் கிம் ஜாங் அன் கலகலப்பாக உரையாடினார்.   கொரோனா அச்சுறுத்தல் உலக நாட்டையே அச்சுறுத்தி வரும் நிலையில், வடகொரியாவில் கொரோனா தொற்று இல்லை என்பதை உணர்த்தும் விதமாக அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை.

Tags:    

Similar News