செய்திகள்
துரித உணவு

இங்கிலாந்தில் துரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடை

Published On 2020-07-25 06:29 GMT   |   Update On 2020-07-25 06:29 GMT
இங்கிலாந்தில் தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்களில் துரித உணவுகளின் விளம்பரங்களை ஒளிப்பரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. எனினும் நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலை வீசுவதற்கு முன்பாக முடிந்தவரை மக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக மக்கள் உடல் பருமனை சரியாக கையாள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முக்கியத்துவம் அளிக்கிறது. கொரோனா தொற்றிலிருந்து ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மரணங்களுக்கு உடல் பருமன் ஒரு முக்கிய காரணி என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதால் இங்கிலாந்து சுகாதாரத்துறை இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் நாட்டில் துரித உணவுகள் விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் அறிவிப்பை வெளியிடுவதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் தயாராகி வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகின. அதன்படி இரவு 9 மணிக்கு முன்னர் தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்களில் துரித உணவுகளின் விளம்பரங்களை ஒளிப்பரப்ப தடை விதிக்கப்படும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி ஹெலன் வாட்லி கூறுகையில் “பகல் நேரத்தில் துரித உணவு விளம்பரங்களுக்கு தடை விதிக்கும் அரசின் திட்டம் குறித்து தற்போது உறுதியான தகவலை தெரிவிக்க முடியாது. எனினும் அது சுகாதாரத் துறையால் கவனிக்கப்படும் விஷயங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. உதாரணமாக விளம்பரங்களில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் ஆரோக்கியமற்ற உணவு விளம்பரங்களின் தாக்கம் குறித்து சுகாதாரத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. எனவே இது கவனிக்கப்படும் கொள்கைகளில் ஒன்றாகும்.” எனக் கூறினார்.
Tags:    

Similar News