செய்திகள்
நிலநடுக்கம்

மிசோரமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: வீதிகளில் மக்கள் தஞ்சம்

Published On 2020-07-24 03:16 GMT   |   Update On 2020-07-24 03:16 GMT
மிசோரமில் மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள சாம்பாய், சைதுவல், ஷியாகா மற்றும் செர்ச்ஹிப் மாவட்டங்களில் கடந்த ஜூன் 18-ந்தேதி முதல் இதுவரை 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அய்ஸ்வால் :

மிசோரமில் மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள சாம்பாய், சைதுவல், ஷியாகா மற்றும் செர்ச்ஹிப் மாவட்டங்களில் கடந்த ஜூன் 18-ந்தேதி முதல் இதுவரை 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.2 முதல் 5.5 புள்ளிகள் வரை பதிவான இந்த நிலநடுக்கத்தால் சாம்பாய் மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

17 கிராமங்களில் பாதிப்பு அதிகம். தேவாலயம், சமுதாயக்கூடம் மற்றும் 170 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பீதியடைந்த பொதுமக்கள் வீதிகளில் கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர். அவர்களுக்கு அரசு உணவு, தண்ணீர் வழங்கி வருகிறது. மக்கள் பயத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மனநல மருத்துவக்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

மேலும் தொடர் நிலநடுக்கத்திற்கான காரணத்தை கண்டறியும் பணியில் புவியியல் ஆய்வு மையத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிக முறை நிலநடுக்கம் ஏற்படுவது தொடர்பாகவும், மிசோரம் பகுதியில் நிலங்களை ஆய்வு செய்யவும் சிறந்த நிபுணர்களை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசையும் முதல்-மந்திரி சோரம்தங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News