செய்திகள்
பிரேசில் அதிபர் போல்சோனரோ

பிரேசில் அதிபருக்கு 2-வது முறை நடத்தப்பட்ட பரிசோதனையிலும் கொரோனா தொற்று

Published On 2020-07-16 23:24 GMT   |   Update On 2020-07-16 23:24 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் போல்சோனரோவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலா:

கொரோனா ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் என எதுவும் தேவையில்லை என கூறியவர் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ. இவருக்கு கடந்த 10 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். ஒரு வாரத்திற்கு மேலாக தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், ‘நான் நலமுடன் இருக்கிறேன். காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை. நான் பணிக்குச் செல்ல வேண்டும். வீட்டில் தனித்திருக்க முடியவில்லை' எனக்கூறி போல்சோனரோ நேற்று மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

இந்நிலையில், பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானது. 

இதனால் மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு விரைவில் மீண்டும் பரிசோதனை செய்வேன் என போல்சோனரோ தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து ஹைட்ராக்சி குளோரக்குயின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

 
Tags:    

Similar News