செய்திகள்
ரஷிய அதிபர் புதின்

தேர்தலில் தலையீடு, கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி தகவல் திருட முயற்சி - ரஷியா மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தும் இங்கிலாந்து

Published On 2020-07-16 22:49 GMT   |   Update On 2020-07-16 22:56 GMT
கடந்த ஆண்டு நடந்த தேர்தலிலும் தற்போது கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி தகவல்களை திருட முயற்சிப்பதில் ரஷியாவை சேர்ந்த ஹேக்கர்கள் ஈடுபடுவதாக இங்கிலாந்து குற்றம் சுமத்தியுள்ளது.
லண்டன்:

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 லட்சத்து 70 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சி தகவல்களை திருட முயற்சிப்பதாக ஒரு நாடு மற்றொரு நாடு மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது வழக்கம். ஏற்கனவே தங்கள் நாட்டு ஆராய்ச்சி தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அந்த வரிசையில் ரஷியா மீது இங்கிலாந்து புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இங்கிலாந்து கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடுகளில் ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேலையில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக அந்நாட்டு தெரிவித்திருந்தது.



இந்நிலையில், ரஷியாவை சேர்ந்த ஹேக்கர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சி தொடர்பான அறிவுசார் தகவல்களை திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து குற்றச்சாட்டியுள்ளது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து பொதுத்தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து - அமெரிக்கா இடையேயான ரகசிய வியாபார தகவல்களை திருடி இணைய தளத்தில் வெளியிட்டு அதன் மூலம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை ரஷியா செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேர்தலில் தலையீடு, கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி தகவல் திருட முயற்சி என இங்கிலாந்து தெரிவித்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் ரஷியா மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என ரஷியா தெரிவித்துள்ளது.    

முன்னதாக ரஷியா மீது கனடா மற்றும் அமெரிக்கா இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News