செய்திகள்
கொரோனா வைரஸ்

உலக அளவில் கொரோனாவுக்கு 5¾ லட்சம் பேர் உயிரிழப்பு

Published On 2020-07-15 10:00 GMT   |   Update On 2020-07-15 10:00 GMT
கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் 5¾ லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
மாஸ்கோ:

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டின் இறுதியில் உருவான கொரோனா, தற்போது உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 1.33 கோடி பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் 5¾ லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலில் சிக்கி சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் எண்ணிக்கை 77¾ லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. அங்கு சுமார் 35 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் பிரேசிலும், 3-வது இடத்தில் இந்தியாவும் உள்ளன. 
Tags:    

Similar News