செய்திகள்
இங்கிலாந்தில் சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை

இங்கிலாந்தில் சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை

Published On 2020-07-15 04:18 GMT   |   Update On 2020-07-15 04:49 GMT
ஹூவாய் நிறுவனத்தின் மூலம் 5ஜி சேவையை பெற்று வரும் இங்கிலாந்து தங்கள் நாட்டில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
லண்டன் :

சீனாவைச் சேர்ந்த பன்னாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்கி வந்தது. இந்த சூழலில் ஹூவாய் நிறுவனம் அமெரிக்க பயனாளர்களின் தகவல்களை திருடி சீனாவுக்கு வழங்கி வருவதாகவும் இதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.

இந்த நிலையில் ஹூவாய் நிறுவனத்தின் மூலம் 5ஜி சேவையை பெற்று வரும் இங்கிலாந்து தங்கள் நாட்டில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் 2027-ம் ஆண்டுக்குள் ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்ப சாதனங்கள் இங்கிலாந்தில் இருந்து முழுமையாக அகற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அதற்கு ஏற்றார்போல் இந்த ஆண்டின் டிசம்பர் இறுதிக்கு பிறகு ஹூவாய் நிறுவனத்திடமிருந்து புதிதாக 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடந்த இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News