செய்திகள்
ஊரடங்கு கட்டுப்பாடு

ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதால் வந்த வினை

Published On 2020-07-14 16:30 GMT   |   Update On 2020-07-14 16:30 GMT
சிங்கப்பூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதால் அங்கு வசித்து வந்த 10 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் 7-ந் தேதியில் இருந்து ஜூன் 2-ந் தேதிவரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன.  அங்கு ஊரடங்கு தொடர்பான நடவடிக்கைகள் மிகத்தீவிரமாகப் பின்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அங்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.  

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோது கடந்த மே 5-ந் தேதி, சிங்கப்பூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் தங்கி இருந்த 3 இந்தியர்கள், வேறு 7 இந்தியர்களை வரவழைத்து ஒன்றாக பொழுது போக்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் போலீசாரிடம் சிக்கினர்.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்திற்காகவும் 10 பேர்களை கைது செய்து கோர்ட்டில்  ஒப்படைத்தனர்.   அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். கடந்த மாதம் அவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அவர்களின் மாணவர் விசா மற்றும் பணி விசா ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், மேற்கண்ட 10 இந்தியர்களும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News