செய்திகள்
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணி

நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு- 60 பேர் உயிரிழப்பு

Published On 2020-07-13 06:34 GMT   |   Update On 2020-07-13 06:36 GMT
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
காத்மாண்டு:

நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களில் மட்டும் ஏராளமான இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சேறும், சகதியும் சரிந்து வீடுகள் மீது விழுந்ததில் பலர் உயிரிரோடு புதைந்தனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 60 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 41 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மழையால் மியாக்தி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் நிலச்சரிவுகளில் சிக்கி 27  பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News