செய்திகள்
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-13 03:52 GMT   |   Update On 2020-07-13 03:52 GMT
ரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 130 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர்.
மாஸ்கோ :

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  தொடர்ந்து பிரேசில் 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் உள்ளன.

இதேபோன்று 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இதுபற்றி அந்நாட்டின் கொரோனாவைரஸ் நெருக்கடி சேவை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 130 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக உயர்ந்து உள்ளது.  6,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், பாதிப்பு எண்ணிக்கையானது 7 லட்சத்து 27 ஆயிரத்து 162 ஆக உயர்ந்து உள்ளது.  இதுவரை 5 லட்சத்து ஓராயிரத்து 61 பேர் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு குணமடைந்து சென்றுள்ளனர் என தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News