செய்திகள்
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் மேலும் 2,521 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-13 03:17 GMT   |   Update On 2020-07-13 03:17 GMT
கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் மேலும் 2,521 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்லாமாபாத் :

உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொடூர கொரோனா பாகிஸ்தானிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் மேலும் 2,521 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு நாடு முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,48,872 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 5,197 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1,56,700 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

அங்கு அதிகபட்சமாக  சிந்து மாகாணத்தில் 1,03,836 பேருக்கும், பஞ்சாப் மாகாணத்தில் 86,556 பேருக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 24,211 பேருக்கும், அதேசமயம் ஒட்டுமொத்தமாக 15,62,638 பேருக்கும் கொரேனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News