செய்திகள்
அணு ஆயுத செறிவூட்டல் மையத்தில் விபத்து

ஈரான்: அணு ஆயுத செறிவூட்டல் மையம் உள்பட பல இடங்களில் அடுத்தடுத்து விபத்து

Published On 2020-07-10 17:49 GMT   |   Update On 2020-07-10 17:49 GMT
ஈரான் நாட்டின் அணு ஆயுத செறிவூட்டல் மையம் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
தெஹ்ரன்:

ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. இதையடுத்து அணு ஆயுத தயாரிப்பு, அணு ஆயுத செறிவூட்டல் நடவடிக்கையில் ஈரான் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறது.

ஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரனில் இருந்து 200 மைல் தொலைவில் உள்ள நடன்ஸ் பகுதியில் உள்ள முக்கிய அணு ஆயுத செறிவூட்டல் மையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென வெடி விபத்துகள் ஏற்பட்டது. 

இந்த வெடி விபத்து காரணமாக அணு ஆயுத செறிவூட்டல் மையம் பெரும் சேதம் அடைந்தது. இந்த விபத்து ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு நடவடிக்கையில் பின்னடைவாக கருதப்படுகிறது.



ஈரானில் அடுத்தடுத்து நடைபெற்ற விபத்துக்கள்:

ஜூன் 26 - ஹோகிர் நகரில் உள்ள திரவ எரிபொருள் உற்பத்தி மையத்தில் வெடி விபத்து, 
ஜூன் 26 - ஷீரஸ் நகரில் உள்ள மின் உற்பத்தி மையத்தில் தீ விபத்து
ஜூன் 30 - மருத்துவமனையில் வெடி விபத்து - 19 பேர் பலி
ஜூலை 2 - நடன்ஸ் அணு ஆயுத செறிவூட்டல் மையத்தில் வெடி விபத்து
ஜூலை 3 - ஷீரஸ் நகரில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து
ஜூலை 4 - அல்வாஸ் நகரில் உள்ள மின் உற்பத்தி மையத்தில் வெடி விபத்து
ஜூலை 4 - மஸ்ஹர் நகரில் உள்ள பெட்ரோ கெமிக்கல் மையத்தில் வாயுக்கசிவு

ஈரானின் அணு ஆயுத செறிவூட்டல் மையம், மின் உற்பத்தி மையம், வேதிப்பொருள் உற்பத்தி மையத்தில் அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டு வருக்றது. 

இந்த விபத்துக்கான காரணங்கள் எவை என்பதை கண்டுபிடிப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், தங்கள் நாட்டின் அணு ஆயுத மையம், மின் உற்பத்தி அமைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சைபர் தாக்குதல் நடத்துவதாக ஈரான் அரசு குற்றச்சாட்டியுள்ளது. 

அணு ஆயுத உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கையாக அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஈரான் குற்றச்சாட்டியுள்ளது.

ஈரானின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேல் மறுப்பு தெரித்துள்ளது மட்டுமல்லாமல் இது அடிப்படை ஆதாரமற்றது எனவும் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News