செய்திகள்
ஹஹியா சோபியா அருங்காட்சியகம்

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் அருங்காட்சியகத்தை மத வழிபாட்டு தளமாக மாற்றியது துருக்கி

Published On 2020-07-10 15:37 GMT   |   Update On 2020-07-10 15:37 GMT
உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை துருக்கி அரசு இஸ்லாமிய மத வழிபாட்டு தளமாக மாற்றியுள்ளது.
இஸ்தான்புல்:

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உலகின் மிகவும் பிரபலமான ஹஹியா சோபியா என்ற மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 

துருக்கி நாட்டின் மிகவும் பிரபலமான இந்த அருங்காட்சியகம் யுனெஸ்கோ அமைப்பின் மூலம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுளது. இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் துருக்கிக்கு சுற்றுலா வருகின்றனர்.

இந்நிலையில் ஹஹியா சோபியா அருங்காட்சியகத்தை இஸ்லாமிய மத வழிபாட்டு தளமாக மாற்றி அதிபர் துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டுள்ளார்.

537 ஆம் ஆண்டு ரோமானிய அரசால் கிருஸ்வத மத வழிபாட்டு தளமாக ஹஹியா சோபியா கட்டிடம் அமைக்கப்பட்டது. ரோமானிய அரசின் விழ்ச்சிக்கு பின் 1453 ஆம் ஆண்டு ஒட்டோமான் அரசர் மெஹ்மித் இந்த கட்டிடத்தை கைப்பற்றினார். இதையடுத்து சோபியா கட்டிடம் இஸ்லாமிய மத வழிபாட்டு தளமாக மாற்றப்பட்டது.

பின்னர் துருக்கியின் முதல் அதிபரான முஸ்தபா 1935 ஆம் ஆண்டு இஸ்லாமிய மத வழிபாட்டு தளமாக இருந்த ஹஹியா கட்டிடத்தை மதச்சார்பின்மைக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக அதை அருங்காட்சியகமாக மாற்றினார். 



இதையடுத்து, அந்நாட்டின் சுற்றுலா தளமாக மாறிய சோபியா அருங்காட்சியகம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இதற்கிடையில், துருக்கியில் உள்ள பெரும்பான்மை மக்களிடம் செல்வாக்கை அதிகரித்து அதன் மூலம் தேர்தல் லாபத்திற்காகவே இந்த நடவடிக்கையில் அவர் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதேபோல் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற அருங்காட்சியகத்தை இஸ்லாமிய மத வழிபாட்டு தளமாக 
மாற்றுவேன் என அவர் வாக்குறிது கொடுத்துள்ளார்.  

முன்னதாக அருங்காட்சியகத்தை மீண்டும் இஸ்லாமிய மத வழிபாட்டு தளமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து துருக்கி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அருங்காட்சியகத்தை வழிபாட்டு தளமாக மாற்ற எந்த தடையும் இல்லை என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

இந்த தீர்ப்பு வெளியான சில மணிநேரத்தில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்த ஹஹியா சோபியா அருங்காட்சியகத்தை இஸ்லாமிய மத வழிபாட்டு தளமாக மாற்றி துருக்கி அதிபர் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து, அருங்காட்சியகத்தில் இனி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மத ரீதியிலான தொழுகைகள் மட்டுமே நடைபெறும் என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். 

துருக்கியின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், யுனெஸ்கோ அமைப்பும் துருக்கியின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.




Tags:    

Similar News