செய்திகள்
கோப்பு படம்

கொரோனா தொற்று அதிகரிப்பு - ஹாங்காங்கில் பள்ளிகள் மீண்டும் மூடல்

Published On 2020-07-10 12:58 GMT   |   Update On 2020-07-10 12:58 GMT
ஹாங்காங்கில் கொரோனா தொற்று சற்று அதிகரித்ததையடுத்து அங்கு திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.
ஹாங்காங்:  

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா கண்டுபிடிக்கபட்டது. இதையடுத்து அந்நாட்டின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நகரமான ஹாங்காங் சீனாவுடனான போக்குவரத்து தொடர்பை துண்டித்தது. 

இதனால் ஹாங்காங்கில் கொரோனா பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. தற்போதுவரை ஹாங்காங்கில் மொத்தமாக 1,365 பேருக்கு கொரோனா
உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து கடந்த மே மாத இறுதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகளில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வகுப்புகள் நடைபெற்று வந்தன.  

இந்நிலையில், ஹாங்காங்கில் நேற்று 42 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த சில நாட்களில் அதிக எண்ணிக்கையில் வைரஸ் உறுதி செய்யப்பட்ட நாளாக உள்ளது. 

இதனால் கொரோனாவின் இரண்டாவது அலை ஹாங்காங்கில் பரவக்கூடும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாங்காங்கில் திறக்கப்பட்ட அனைத்து பள்ளிகளையும் உடனடியாக மூட ஹாங்காங் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இதனால், ஹாங்காங்கில் மே மாதம் திறக்கப்பட்ட பள்ளிகள் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது மீண்டும் மூடப்பட்டுள்ளன.
 

Tags:    

Similar News