செய்திகள்
கொரோனா பரிசோதனை

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா - 7 லட்சத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை

Published On 2020-07-08 19:51 GMT   |   Update On 2020-07-08 19:51 GMT
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.
மாஸ்கோ:

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் வேகமெடுத்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.   

இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 792 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 173 பேர் பலியாகினர். இதையடுத்து, அங்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 667 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 4.72 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
Tags:    

Similar News