செய்திகள்
பிரதமர் மோடி

லண்டனில் 3 நாட்கள் நடைபெறுகிற உலகளாவிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Published On 2020-07-08 03:06 GMT   |   Update On 2020-07-08 03:06 GMT
லண்டனில் 3 நாட்கள் நடைபெறுகிற உலகளா விய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக கலந்து கொண்டு பேசுகிறார். இது, இந்தியாவுக்கு தொழில், வர்த்தக, முதலீடு வாய்ப்புகளை ஈர்க்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
லண்டன் :

கொரோனா வைரஸ் தொற் றால் உலகளாவிய பொருளா தாரம் சரிந்துள்ளது. இந்த சரிவை மீட்பதற்கான வழி களில் ஒன்றாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ‘இந்தியா குளோபல் வீக்’ என்ற பெயரில் 3 நாள் உலகளா விய உச்சி மாநாடு நடக் கிறது.

இந்த மாநாடு நாளை (வியாழக்கிழமை) தொடங்கு கிறது. 11-ந் தேதி நிறைவு அடைகிறது. இந்த மாநாட்டில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி டொமினிக் ராப், உள்துறை மந்திரி பிரித்தி பட்டேல், சுகா தார மந்திரி மேத் ஹான்காக், சர்வதேச வர்த்தக மந்திரி லிஸ் டிரஸ் உள்ளிட்டோர் பேசுகிறார்கள்.

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வழியாக பங்கேற்று பேசுகிறார்.

இது பற்றி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்து வரும் ‘இந்தியா இன்க்’ குழுமத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான மனோஜ் லாத்வா கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து வெளியே வர உலகம் போராடி வருகிறது. இந்த தருணத்தில் இந்தியாவின் அபரிமிதமான திறன், தொழில் நுட்ப வலிமை, தலைமைத்துவத்துக்கான தேடல் ஆகியவை உலகளவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்திய பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்துகொண்டு விடுக்கிற செய்தி, ‘இந்தியா குளோபல் வீக்’ உச்சி மாநாட்டின் சிறந்த புதிய உலக கருப்பொருளுடன் எதி ரொலிக்கும் என்று நம்பு கிறேன்” என குறிப்பிட்டுள் ளார்.

மேலும் பிரதமர் மோடியின் உரை, இந்தியாவுக்கு தொழில், வர்த்தகம், உற்பத்தி, அன்னிய முதலீட்டு வாய்ப்புகளை ஈர்ப்பதை மையமாக கொண்டி ருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

இந்த மாநாட்டில், இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், ரெயில்வே மற்றும் வர்த்தக மந்திரி பியூஸ் கோயல், சிவில் விமானம் மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மந்திரி ஹர்தீப்சிங் பூரி, தகவல் தொழில் நுட்ப மந்திரி ரவிசங் கர் பிரசாத், திறன் மேம்பாட்டு மந்திரி மகேந்திரநாத் பாண்டே உள்ளிட்டோரும் கலந்து கொண்டு (காணொலி காட்சி வழியாக) பேசுகிறார்கள்.

இந்த மாநாட்டில் இந்திய வம்சாவளி ஹாலிவுட் நடிகர் குணால் நய்யார், ஈஷா யோகா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், பத்திரிகையாளர் பர்கா தத், வாழும் கலை நிறு வனர் ரவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கிற கலந்துரையாடல் களும் நடைபெற உள்ளன.
Tags:    

Similar News