செய்திகள்
கோப்பு படம்

இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடையா? ஆலோசித்து வருவதாக மைக் பாம்பியோ தகவல்

Published On 2020-07-08 00:19 GMT   |   Update On 2020-07-08 00:23 GMT
அமெரிக்காவில் டிக்டாக் உள்ளிட்ட பல்வேறு சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

லடாக் எல்லையில் ஜூன் 15-ம் தேதி இந்திய-சீன ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலின் போது இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம்
அடைந்தனர். சீன தரப்பில் 43 வீரர்கள் படுகாயம் அல்லது மரணம் அடைந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.

இதனிடையே இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிக்-டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது.

இந்நிலையில், இந்தியாவை தொடர்ந்து டிக்டாக் உள்ளிட்ட பல்வேறு சீன செயலிகளுக்கு தடை விதிக்கும் வேலையில் அமெரிக்காவும் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறுவத்துறை மந்திரி மைக் பாம்பியோ கூறியதாவது, டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் மூலம் பயனாளர்களின் தகவல்களை சீனா உளவு பார்க்கிறது.

இந்த செயலிகளை தடை செய்வது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் சீன செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பான
தகவல்களை அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு 46 மில்லியன் பேர் பயனாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News