செய்திகள்
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ

முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2020-07-07 16:21 GMT   |   Update On 2020-07-07 16:24 GMT
சமூக விலகல், முகக்கவசம் தேவையில்லை என்று கூறி வந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரேசில் நாட்டு அதிபராக இருப்பவர் ஜெய்ர் போல்சோனாரோ. கொரோனா வைரசால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரசாரம் செய்தவர்.

மக்கள் லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கி இருந்தால், கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பு பொருளாதார முடக்கத்தால் ஏற்படும். மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என தொடர்ந்து போல்சனாரோ பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அதிபர் போல்சனாரோவும் வெளியே சென்றால் முகக்கவசத்தை அணிவதில்லை. நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததால் தற்போது முகக்கவசம் அணிகிறார்.



இந்நிலையில் போல்சோனாரோ கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டது. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். வெளியில் வரும்போது என்னுடைய நுரையீரல் சுத்தமாக உள்ளது என்று கூறினார்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு பாசிட்டிவ் என வந்துள்ளது. என்றாலும் அவருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும், அவர் சிறப்பாக இருப்பதாக உணர்வதாகவும் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

இவரின் மோசமான கொள்கையால் பிரேசில் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.
Tags:    

Similar News