செய்திகள்
கோர்ட் அறிவிப்பு

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை

Published On 2020-07-07 03:02 GMT   |   Update On 2020-07-07 03:02 GMT
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரிக்கு சிங்கப்பூர் கோர்ட் 7 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் :

சிங்கப்பூரில் பெண் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹேமாவதி குணசேகரன் (வயது 37). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட 2 ஐபேடுகளை அவர்களுக்குத் தெரியாமல் அடகு கடையில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.

பல நாட்கள் ஆகியும் ஹேமாவதி குணசேகரன் அந்த ஐபேடுகளை திரும்ப பெறாததால் அடகுக் கடைக்காரர் அவற்றை விற்பனை செய்துவிட்டார். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து ஹேமாவதி குணசேகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை சிங்கப்பூர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில் ஹேமாவதி குணசேகரனன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி இந்த வழக்கில் நேற்று தனது தீர்ப்பை வழங்கினார்.

அவர் ஹேமாவதி குணசேகரனுக்கு 7 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News