செய்திகள்
அட்டாரி-வாகா எல்லை

பாகிஸ்தானில் சிக்கியுள்ள 114 இந்தியர்கள் வரும் 9-ம் தேதி நாடு திரும்புகின்றனர்

Published On 2020-07-06 16:04 GMT   |   Update On 2020-07-06 16:04 GMT
பாகிஸ்தானில் சிக்கி தவிக்கும் 114 இந்தியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியே சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
லாகூர்:

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனால் அந்நாட்டிற்கு சென்ற இந்தியர்கள் சிக்கி தவித்தனர்.  சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்கள் இந்தியாவுக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுபற்றி பாகிஸ்தான் நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில், பாகிஸ்தானில் சிக்கி தவிக்கும் 114 இந்தியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியே வரும் 9-ம் தேதி சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். சுகாதார பாதுகாப்பு விதிகளின்படி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்து உள்ளது. இதன்படி, 114 இந்தியர்களும் தரை வழியே நடந்து இந்தியாவுக்கு திரும்புகிறார்கள்.
Tags:    

Similar News