செய்திகள்
இந்தியர்கள் போராட்டம்

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம் - திபெத், தைவான் மக்களும் ஆதரவு

Published On 2020-07-05 10:15 GMT   |   Update On 2020-07-05 10:15 GMT
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் சீனாவின் ஆக்கிரமிப்பு போக்கை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
நியூயார்க்:

லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதும், இந்திய வீரர்கள் 20 பேரை கொலை செய்ததும் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நாட்டுக்கு எதிராகவும், அவர்களது தயாரிப்புகளை புறக்கணிக்கக்கோரியும் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் சீனாவின் ஆக்கிரமிப்பு போக்கை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். அங்குள்ள நியூயார்க், நியூஜெர்சி மாநிலங்களில் வசிக் கும் இந்தியர்கள், புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கூடி சீனாவுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

‘சீனாவை புறக்கணிப்போம்’ என்ற பெயரில் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும், ‘பாரத் மாதா கி ஜே’, ‘சீன பொருட்களை புறக்கணிப்போம்’ என்பன போன்ற கோஷங்களை எழுப்பினர். சீனாவை பொருளாதார ரீதியில் புறக்கணிக்கவும், தூதரக ரீதியாக தனிமைப்படுத்தவும் வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசினர்.

இந்தியர்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திபெத், தைவான் மக்களும் பங்கேற்றனர். அவர்களும் ‘இந்தியாவுக்கு திபெத் ஆதரவளிக்கிறது’, ‘திபெத்தில் இருந்து சீனா வெளியேற வேண்டும்’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
Tags:    

Similar News