செய்திகள்
கோப்பு படம்

1 கோடியே 13 லட்சம் பேருக்கு கொரோனா - அதிரும் உலக நாடுகள்

Published On 2020-07-05 01:11 GMT   |   Update On 2020-07-05 01:11 GMT
உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
ஜெனிவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 13 லட்சத்து 72 ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 413 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 44 லட்சத்து 5 ஆயிரத்து 201 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 530 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் பாதிப்பில் இருந்து 64 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 29,35,770
பிரேசில் - 15,78,376
ரஷியா - 6,74,515
இந்தியா - 
பெரு - 2,99,080  
ஸ்பெயின் - 2,97,625
சிலி - 2,91,847
இங்கிலாந்து - 2,84,900
மெக்சிகோ - 2,45,251
இத்தாலி - 2,41,419
ஈரான் - 2,37,878
பாகிஸ்தான் - 2,25,283
சவுதி அரேபியா - 2,05,929
துருக்கி - 2,04,610

Tags:    

Similar News