செய்திகள்
டிரம்ப்-ஜி ஜிங்பிங்

சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் கொரோனா - டிரம்ப் காட்டம்

Published On 2020-07-02 20:11 GMT   |   Update On 2020-07-02 20:11 GMT
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: 

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது.

வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் உருவான தகவலை சீனா மறைத்து விட்டதால் தான் இத்தனை உயிரிழப்புகள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் கொரோனா வைரஸ் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று வாஷிங்டனில் உள்ள வெள்ளைமாளிகையில் டிரப்ம் கூறுகையில், 

''கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய், அது தான் இது. இது நடைபெறாமல் (பரவாமல்) இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள்   
(சீனா) இது நடைபெற(பரவ) அனுமதித்துள்ளனர்.

நாங்கள் அப்போது தான் புதிதாக வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தோம். கையெழுத்தான மையின் ஈரம் காய்வதற்கு முன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது (கொரோனா வைரஸ் பரவிய நேரம்)’’ என அவர் தெரிவித்தார்.

14 ஆம் நூற்றாண்டில் உருவான பிளேக் என்ற உயிர் கொல்லி நோயால் 25 மில்லியனுக்க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News