செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

பாகிஸ்தானில் பங்குச்சந்தை அலுவலகம் மீதான தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் - இம்ரான்கான் குற்றச்சாட்டு

Published On 2020-07-01 11:19 GMT   |   Update On 2020-07-01 11:19 GMT
பாகிஸ்தானில் பங்குச்சந்தை அலுவலகம் மீதான தாக்குதலில் இந்தியா ஈடுபட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தை குறிவைத்து துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் பங்குச்சந்தை அலுவலகம் மீதான தாக்குதலில் இந்தியா ஈடுபட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார். பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய இம்ரான்கான் "பங்குச்சந்தை அலுவலகத் தாக்குதலில் இந்தியா ஈடுபட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் உள்ளது" எனக் கூறினார்.
Tags:    

Similar News