செய்திகள்
கில்ஜித் பல்சிஸ்தான்

கில்ஜித் பல்சிஸ்தான் மாகாணத்தில் ஆகஸ்டு 18-ந்தேதி தேர்தல்

Published On 2020-06-29 12:50 GMT   |   Update On 2020-06-29 12:50 GMT
கில்ஜித் பல்சிஸ்தான் மாகாணத்தில் ஆகஸ்டு 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி உத்தரவிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீர் பகுதியில் உள்ள கில்ஜித் பல்சிஸ்தான் மாகாண சட்டசபையின் பதவிக்காலம் கடந்த 24-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து அங்குள்ள 24 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் 30-ந்தேதி உத்தரவிட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து கில்ஜித் பல்சிஸ்தான் மாகாணத்தில் ஆகஸ்டு 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சார்பில், பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் (மே) சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. அதில், ஜம்மு கா‌‌ஷ்மீர், லடாக் மற்றும் கில்ஜித், பல்சிஸ்தான் யூனியன் பிரதேச பகுதிகள் அனைத்தும் இந்தியாவிற்கு சொந்தமானவை. பயங்கரவாதிகளின் உதவியோடு இந்த பகுதிகளை அபகரிக்க முயற்சிக்கக்கூடாது என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News