செய்திகள்
ருஷ்ணர் கோவில் கட்டுவதற்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்ட காட்சி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

Published On 2020-06-25 13:15 GMT   |   Update On 2020-06-25 13:15 GMT
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவில் கட்டப்படுகிறது. 20,000 சதுரடியில் கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவில் கட்டப்படுகிறது. அங்குள்ள எச்-9 பகுதியில் 20,000 சதுரடியில் கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலாளர் லால் சந்த் மால்கி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து என்ற அமைப்பு சார்பில் இந்த கோவில் கட்டப்படுகிறது. கோவிலுக்கு ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவில் கட்ட ரூ. 10 கோடியை பாகிஸ்தான் அரசு வழங்குகிறது.

நிகழ்ச்சியில் பேசிய லால் சந்த் மால்கி, ‘’இஸ்லாமாபாத்தில் இந்து சமயத்தைப் பின்பற்றும் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. அவர்களின் நீண்ட கால கோரிக்கையும் கோயில் கட்டுவது வழியாக நிறைவுற்றுள்ளது. 1947 ம் ஆண்டுக்கு முன் பாகிஸ்தானில் அமைந்திருந்த இந்து கோவில்களின் கட்டுமானத்தின்படியும் வடிவமைப்பின்படியும் புதிய இந்து கோவில் கட்டப்படும். இந்து மக்கள் பயன்பாட்டுக்காக மயானமும் அமைக்கப்படும்‘’ என்றார். கடந்த 2017-ம் ஆண்டே இஸ்லாமாபாத்தில் இந்து கோவில் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டாலும் நடைமுறை காரணங்களுக்காக கோயில் அமைவது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News