செய்திகள்
அதிபர் ஹசன் ருஹானி

ஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் - அதிபர் ஹசன் ருஹானி வலியுறுத்தல்

Published On 2020-06-25 07:02 GMT   |   Update On 2020-06-25 07:02 GMT
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதற்காக ஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி வலியுறுத்தல்
டெஹ்ரான்:

அதிக அளவில் அணு ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஈரான் அரசுடன் சீனா, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகள் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது அணு ஆயுத பயன்பாட்டை குறைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடையை இந்த 6 வல்லரசு நாடுகளும் திரும்ப பெற வேண்டும்.



ஈரானுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார். மேலும் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது. எனினும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதற்காக மன்னிப்பு கேட்பதுடன், ஈரானுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கினால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் பேசிய ஹசன் ருஹானி இதுகுறித்து கூறுகையில் “அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரானுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி இதற்காக அமெரிக்கா ஈரான் மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு அமெரிக்காவின் நடவடிக்கையால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கூறினார்.
Tags:    

Similar News