செய்திகள்
டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்துக் கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு

Published On 2020-06-20 03:03 GMT   |   Update On 2020-06-20 03:03 GMT
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்த நடந்த கருத்து கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வா‌ஷிங்டன் :

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதியிடம் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கியிருக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தொடர்ந்து கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் அமெரிக்காவின் கின்னிபியாக் பல்கலைக்கழகம் கடந்த 11ந் தேதி முதல் 15ந் தேதி வரை தேசிய அளவில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கருத்துக் கணிப்பில் தற்போது தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, டிரம்புக்கு ஆதரவாக 41 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர். அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு தரமாக 49 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

இதன் மூலம் டிரம்பை விட ஜோ பிடன் 8 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். அதேபோல் கொரனோ வைரஸை கையாண்ட விதம், வேலை இழப்பு பொருளாதார சரிவு உள்ளிட்ட விவகாரங்களில் டிரம்பின் தலைமைக்கு எதிராக 55 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
Tags:    

Similar News