செய்திகள்
போலீசாரை கண்டித்து போராட்டம்

கருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம் - பல பகுதிகளில் ஊரடங்கு அமல்

Published On 2020-05-31 00:43 GMT   |   Update On 2020-05-31 00:43 GMT
கருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் அமெரிக்காவில் பதற்றம் நிலவியது. இதையடுத்து, பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் கருப்பர் இனத்தினர், வெள்ளை இன போலீசாரால் கொல்லப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.

அந்த வரிசையில், மின்னசோட்டா மாகாணம், மின்னபோலிஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயதான கருப்பர் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

அவரது மரணத்துக்கு நீதி கேட்டு நாடு மின்னசோட்டா, நியூயார்க், அட்லாண்டா என பல பகுதிகளிலும் கருப்பர் இன மக்கள் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்தன. போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா மற்றும் அட்லாண்டா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன்பு நேற்று முன்தினம் மாலை போராட்டக்காரர்கள், ஜார்ஜ் பிளாய்டின் புகைப்படங்களை ஏந்தி திரண்டு வந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் வெள்ளை மாளிகை சிறிது நேரம் பூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News