செய்திகள்
எவரெஸ்ட் சிகரத்தை அளக்க செல்லும் சீன குழுவினர்

நேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது

Published On 2020-05-28 03:19 GMT   |   Update On 2020-05-28 03:19 GMT
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு என்பதில் சீனாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே வேறுபாடு நிலவுகிறது. எனவே சீனா எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளவிடுவதற்கு ஒரு குழுவை அனுப்பி உள்ளது.
பீஜிங் :

உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ட் சிகரம். இதன் உயரம் 8,848 மீட்டர் ஆகும். இதை இந்தியா 1954-ம் ஆண்டு அளவிட்டு சொல்லி பலராலும் ஏற்கப்பட்டு வந்தது.

ஆனால் எவரெஸ்ட் சிகரத்தின் அளவு 8844.43 மீட்டர் என்று சீனா சொல்கிறது. நேபாளமோ அதில் இருந்து 4 மீட்டர் உயரத்தை குறைத்து சொல்கிறது. இதனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு என்பதில் சீனாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே வேறுபாடு நிலவுகிறது.

எனவே சீனா எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளவிடுவதற்கு ஒரு குழுவை அனுப்பி உள்ளது. அந்தக் குழு திபெத் வழியாக நேற்று அங்கு சென்று அடைந்தது.

இந்த குழு பனிமூடிய சிகரத்த்தில் கணக்கீடு செய்வதற்காக ஒரு மார்க்கரை அமைக்க தொடங்கினர்.

ஏற்கனவே சீன குழுவினர் 1975-ல் இரு முறை அளவிட்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848.13 மீட்டர் என்றும், 2005-ல் அளவிட்டு 8844.43 மீட்டர் என்றும் கூறியது நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையே எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு 5-ஜி நிலையங்களை உருவாக்க சீன நிறுவனமான ஹூவாய், சீனா மொபைலுடன் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News