செய்திகள்
எலக்ட்ரிக் டேக் அணிந்திருக்கும் பெண்கள்

சமூக இடைவெளியை கடைபிடிக்க எலக்ட்ரானிக் டேக்கை பயன்படுத்தும் இத்தாலி மியூசியம்

Published On 2020-05-24 17:23 GMT   |   Update On 2020-05-24 17:23 GMT
இத்தாலி மியூசியம் ஒன்று பார்வையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக எல்க்ட்ரானிக் டேக்கை பயன்படுத்துகிறது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. சுமார் 32 ஆயிரத்து 735 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இரண்டரை மாதங்களுக்குப்பின் இத்தாலியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மக்கள் வெளியேறும்போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியின் பெர்காமோ என்ற இடத்தில் அகாடெமியா கர்ராரா மியூசியம் ஒன்று உள்ளது. சுமார் 70 நாட்களுக்குப்பின் மே 22-ந்தேதி (நேற்றுமுன்தினம்) திறக்கப்பட்டது. இந்த மியூசியத்தில் உள்ள ஆர்ட் கேலரியை பார்வையிட வரும் பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய எலக்ட்ரிக் டேக்கை உருவாக்கியுள்ளது.



பார்வையாளர்கள் எலக்ட்ரிக் டேக்கை கையில் கட்டாயம் கட்ட வேண்டும். அப்படி கட்டியிருக்கும்போது ஒருவர் மற்றொருவரிடம் இருந்து 1.5 மீட்டர் இடைவெளி விட்டு நிற்கவில்லை என்றால் எலக்ட்ரிக் டேக் அதிர்வை ஏற்படுத்தும். மேலும் எல்.இ.டி. லைட்டும் எரியும். இதன்மூலம் அவர்கள் சமூக இடைவெளியை உறுதி செய்து கொள்வார்கள்.

ஆகவே, மியூசியத்தில் பணிபுரிபவபர்கள் சமூக இடைவெளியை கண்காணிக்க வேண்டும் என்ற பரபரப்பாக செயல்பட வேண்டியதில்லை.
Tags:    

Similar News