செய்திகள்
எலும்புகூடு

மெக்சிகோவில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

Published On 2020-05-24 06:26 GMT   |   Update On 2020-05-24 06:26 GMT
மெக்சிகோவில் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத யானைகள் (மம்முத்) உள்ளிட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
மெக்சிகோசிட்டி:

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்த நாட்டில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத யானைகள் (மம்முத்) உள்ளிட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘‘கொலம்பியாவின் மிகப்பெரிய விலங்கினங்களின் எலும்புக்கூடுகள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராட்சத யானை, காட்டெருமை, ஒட்டகங்கள், குதிரைகள் ஆகியவற்றின் எலும்புக்கூடுகளுடன் மனித எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன’’ என கூறினர்.பனியுக காலத்தின் விலங்குகளின் எலும்புக்கூடுகளை கண்டுபிடிப்பதில் இந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆர்வம்  காட்டி வருகின்றனர். கடந்த டிசம்பரில் இதே தொல்லியல் குழுவினர் சிறு சிறு விலங்குகளின் எலும்புகளைக் கண்டெடுத்தது நினைவுகூரத்தக்கது.ஸ்பானிய
காலனியாதிக்கத்துக்கு முந்தைய நாகரிகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்த ஆய்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் விமானநிலைய கட்டுமானத்தை தடுத்து நிறுத்துவதற்காகத்தான் இந்த ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற கருத்தும் பொதுமக்களிடையே நிலவுகிறது. ஆனால் தொல்லியல் குழு இதனை மறுத்துள்ளது.
Tags:    

Similar News