செய்திகள்
அதிபர் டொனால்டு டிரம்ப்

கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம் - அதிபர் டிரம்ப்

Published On 2020-05-15 20:24 GMT   |   Update On 2020-05-15 20:24 GMT
கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டிவிட்டது.

அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி இல்லாத கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி எனக்கு மிகவும் நல்ல நண்பர் என்பது உங்களுக்குத் தெரியும். கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும்.

இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் என நம்புகிறேன். தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது.

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News