செய்திகள்
ராணுவவீரர்கள் - கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 13 பேர் சுட்டுக்கொலை

Published On 2020-05-06 12:26 GMT   |   Update On 2020-05-06 12:26 GMT
ஆப்கானிஸ்தானில் ராணுவவீரர்களுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹெல்மண்ட் மாகாணத்தின் லோய் மாண்ட நகரில் தலீபான் பயங்கரவாதிகள் பலர் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற ராணுவவீரர்கள் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

அதனை தொடர்ந்து, பயங்கரவாதிகள் ராணுவவீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதன் பிறகு ராணுவவீரர்கள் அவர்களுக்கு தக்கபதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில் தலீபான் பயங்கரவாதிகள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News