செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் இயற்கையாகவே விலங்குகளிடம் இருந்து பரவியிருக்கலாம்- பிரிட்டன் நம்பிக்கை

Published On 2020-05-06 06:45 GMT   |   Update On 2020-05-06 06:45 GMT
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இயற்கையாகவே விலங்குகளிடமிருந்து பரவத் தொடங்கியிருக்கலாம் என பிரிட்டன் நம்புகிறது.
லண்டன்:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வுகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவருகிறார். ஆனால் டிரம்பின் குற்றச்சாட்டுக்கு முரண்படான நிலைப்பாட்டை பிரிட்டன் கொண்டுள்ளது.

ஆய்வகத்துடன் தொடர்பு இல்லாத விலங்குகளிடமிருந்து இயற்கையாகவே மனிதர்களுக்கு முதன்முதலில் கொரோனா பரவியிருக்கலாம் என பிரிட்டன் நம்புவதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.



கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்து தற்செயலாக கசிந்திருக்கும் என்பதை நிரூபிக்க முடியாது, இது சாத்தியமில்லை என்று கருதுவதாக பிரிட்டன் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீனாதான் கொரோனா பரவலுக்கு காரணம் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தாலும், பிரிட்டனின் நிலைப்பாடு குறித்து எந்த கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.
Tags:    

Similar News