செய்திகள்
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம்

தென்கொரியா: சேமிப்பு கிடங்கு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து - 38 பேர் பலி

Published On 2020-04-30 00:34 GMT   |   Update On 2020-04-30 00:34 GMT
தென்கொரியாவில் தொழிலாளர்கள் வேலை செய்துவந்த ஒரு சேமிப்பு கிடங்கு கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர்.
சியோல்:

தென்கொரியா நாட்டின் ஜீயோன்ஹூ மாகாணம் இன்ச்யான் நகரில் பொருட்களை வணிக ரீதியில் சேமித்து வைக்கும் விதமாக பல அடுக்குகளை கொண்ட சேமிப்புக்கிடங்கு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிட பணியில் 75-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்துவந்தனர்.

இந்நிலையில், அந்த கட்டிடத்தில் நேற்று வழக்கப்போல தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். கட்டிடத்தில் லிப்ட் அமைக்கும் பணியை தொழிலாளர்கள் மேற்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

தீ மளமளவென பரவியதால் பல மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்தில் தொழிலாளர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் கட்டிடத்தில் பரவிய தீயை அணைத்து அங்கு சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 



இந்த மீட்பு நடவடிக்கையில் கட்டிடத்திற்குள் சிக்கி தவித்த தொழிலாளர்கள் பலர் கடுமையான தீ காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி 38 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சப்படுகிறது.
Tags:    

Similar News