செய்திகள்
கோப்பு படம்

ஆப்கானிஸ்தான்: அரசுப்படையினரின் வான்வெளி தாக்குதலில் 7 தலிபான்கள் பலி

Published On 2020-04-27 00:45 GMT   |   Update On 2020-04-27 00:45 GMT
ஆப்கானிஸ்தானில் அரசுப்படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 7 பேர் கொல்லப்பட்டனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. 

இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இதற்கிடையே, உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே போடப்பட்ட அமைதி ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது. 

இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் நடைபெறத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் லோஹர் மாகாணம் புல்-இ-ஆலம் பகுதியில் உள்ள நஸ்ரி என்ற கிராமத்தில் உள்ள தலிபான் மறைவிடங்களை குறிவைத்து ஆப்கானிஸ்தான் விமானப்படையினர் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 7 பேர் கொல்லப்பட்டதாக அரசுப்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கிடையில் அந்நாட்டின் குண்டூஸ் மாகாணம் இமாம் ஷாகீப் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். 

இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
Tags:    

Similar News