செய்திகள்
கோப்பு படம்

உலகையே உலுக்கி வரும் கொரோனா... 16 லட்சம் பேருக்கு பாதிப்பு... ஒரு லட்சம் பேர் பலி... அப்டேட்ஸ்

Published On 2020-04-10 19:01 GMT   |   Update On 2020-04-10 19:42 GMT
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
ஜெனிவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதற்கிடையில், உலகம் முழுவதும் வைரஸ் பரவியவர்களி எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, 16 லட்சத்து 77 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 73 ஆயிரத்து 538 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்து ஆயிரத்து 559 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-

அமெரிக்கா - 18,015
ஸ்பெயின் - 15,970
இத்தாலி - 18,849
பிரான்ஸ் - 13,197
ஜெர்மனி - 2,607
சீனா - 3,336
இங்கிலாந்து - 8,958
ஈரான் - 4,232
துருக்கி - 1,006
பெல்ஜியம் - 3,019
சுவிஸ்சர்லாந்து - 1,001
நெதர்லாந்து - 2,511


கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு :-

அமெரிக்கா - 4,89,268
ஸ்பெயின் - 1,57,053
இத்தாலி - 1,47,577
பிரான்ஸ் - 1,24,869
ஜெர்மனி - 1,19,624
சீனா - 81,907
இங்கிலாந்து - 73,758
ஈரான் - 68,192
துருக்கி - 47,029
பெல்ஜியம் - 26,667
சுவிஸ்சர்லாந்து - 24,551
நெதர்லாந்து - 23,097
கனாடா - 22,046

Tags:    

Similar News